Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 03, வியாழக்கிழமை
Shanmugan Murugavel / 2021 ஜனவரி 11 , மு.ப. 10:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆப்கானிஸ்தானின் தென்மேற்கு நிம்றோஸ் மாகாணத்தில், அந்நாட்டுப் படைகளால் நடாத்தப்பட்ட வான் தாக்குதல்களில் பொதுமக்கள் கொல்லப்பட்டதாக உள்ளூர் அதிகாரிகள், சம்பவத்தைக் கண்ணுற்றோர் தெரிவித்துள்ளனர்.
நேற்று முன்தினமிரவு இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் உயிரிழந்தோரின் சரியான எண்ணிக்கையானது உடனடியாக தெளிவில்லாமலுள்ளது.
கஷ்ருட் மாவடட்டத்தில் இடம்பெற்ற வான் தாக்குதலில், சிறுவர்கள், பெண்கள் உள்ளடங்கலாக குறைந்தது 14 பேர் இறந்ததாக மாகாண ஆளுநர் பஸ் மொஹமட் நஸிர், டி.பி.ஏ செய்தி முகவரகத்துக்கு நேற்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், எட்டுப் பேர் உயிரிழந்ததாக உள்ளூர் நகரசபை உறுப்பினரான பிபி கைர்-உன் நிஸா குஹுமை தெரிவித்துள்ள நிலையில், எத்தனை பொதுமக்கள் பாதிப்படந்தது என தெளிவில்லாமலுள்ளதாக நிம்றோஸ் பிரதி ஆளுநர் அப்துல் நபி புரஹவி தெரிவித்துள்ளார்.
இதேவேளை, உயிரிழந்தவர்களின் உறவினர்களும் சம்பவத்தைக் கண்ணுற்றவர்களும் 18 பேர் உயிரிழந்ததாகக் குறிப்பிட்டுள்ளனர்.
இந்நிலையில், குறித்த தாக்குதலை உறுதிப்படுத்தியுள்ள அரசாங்க அதிகாரிகள், ஆப்கான் பாதுகாப்புப் படைகளுடன் போராடும் தலிபான் ஆயுததாரிகளே உயிரிழந்த அனைவரும் எனக் கூறியுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago