Shanmugan Murugavel / 2016 ஜூலை 18 , பி.ப. 09:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆபிரிக்க ஒன்றியத்தில் மொரோக்கோ, மீளவும் இணைய விரும்புவதாக, அந்நாட்டின் அரசர் மொஹமட் VI தெரிவித்துள்ளார். அவ்வொன்றியத்திலிருந்து அந்நாடு வெளியேறி 32 ஆண்டுகளின் பின்னரே, இந்தக் கோரிக்கை தற்போது முன்வைக்கப்பட்டுள்ளது.
ஆபிரிக்க ஒன்றியத்தின் அங்கமாக, மேற்கு சஹாரா சேர்க்கப்பட்டதைத் தொடர்ந்தே, அதிலிருந்து மொரோக்கோ வெளியேறியிருந்தது. இன்னமும் கூட, தனது நாட்டின் அங்கமே மேற்கு சஹாரா என, மொரோக்கோ தெரிவித்து வருகின்றது.
எனினும், ஒன்றியத்தில் மீள இணைவதற்கு, விருப்பத்தை வெளியிட்டுள்ள மொரோக்கோ சார்பாக, அதன் அரசர், அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். "நீண்டகாலமாக எங்கள் நண்பர்கள், மீளவும் வருமாறு கேட்டு வந்தார்கள். அந்தத் தருணம், இப்போது வந்துவிட்டது" என அவர் தெரிவித்தார்.
மேற்கு சஹாரா பகுதியை, 1975ஆம் ஆண்டு முதல் ஆக்கிரமித்துள்ள மொரோக்கோ, 1991ஆம் ஆண்டு மொரோக்கோவுக்கும் மேற்கு சஹாராவுக்கும் இடையிலான சமாதான ஒப்பந்தத்தின் பின்னரும் கூட, மேற்கு சஹாராவை அங்கிகரிக்க மறுத்து வருகிறது. இப்போதும் கூட, அரசியல் தீர்வொன்றுக்குத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ள அரசர், அப்பகுதிக்கான சுதந்திரத்துக்கு மறுப்புத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
1 hours ago
3 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
4 hours ago
4 hours ago