2021 ஏப்ரல் 21, புதன்கிழமை

இராணுவப் புரட்சிக்கெதிரான 3ஆவது நாள் ஆர்ப்பாட்டங்களில் பிக்குகள்

Shanmugan Murugavel   / 2021 பெப்ரவரி 08 , பி.ப. 02:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மியான்மார் தலைநகர் நெய்க்கிடாவில், ஆர்ப்பாட்டக்காரர்களை நோக்கி நீர்த்தாரைப் பிரயோகமொன்றை பொலிஸார் இன்று மேற்கொண்டுள்ளனர்.

மியான்மாரின் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் ஆங் சான் சூ கியை ஒரு வாரத்துக்கு முன்னர் இராணுவம் அகற்றியதுக்கெதிர்ரான மூன்றாவது நாள் ஆர்ப்பாட்டங்களில் மியான்மார் முழுவதும் ஆயிரக்கணக்கானோர் இணைந்துள்ள நிலையிலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ஆர்ப்பாட்டங்களில் இணையுமாறுமாறான, சிவில் ஒத்துழையாமை இயக்கத்தை ஆதரிக்குமாறான அழைப்புகள் பலமாக இருந்ததுடன், மேலும் ஒழுங்கமைக்கப்பட்டதாகக் காணப்பட்டிருந்தன.

இந்நிலையில், யங்கூனில் காவியுடை தரித்த பிக்குகள், பணியாளர்கள், மாணவர்களுடன் ஆர்ப்பாட்டங்களில் முன்னரங்காகச் சென்றிருந்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .