Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 ஜூலை 24 , பி.ப. 03:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐக்கிய அமெரிக்க தாக்குதல் ஜெட்டொன்றுடன் மோதலைத் தவிர்ப்பதற்காக விமானத்தின் உயரத்தை விமானி மாற்றியதையடுத்து ஈரானிய விமானசேவை விமானமொன்றின் சில பயணிகள், சிரியாவின் மேல் காயமடைந்ததாக ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
எவ்வாறெனினும், தமது எஃப்-15-ஆனது பாதுகாப்பான தூரமொன்றில் இருந்ததாக ஐக்கிய அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது.
மஹான் எயாருக்குச் சொந்தமான மேற்கூறப்பட்ட விமானமானது விமானி பாதுகாப்பு நடைமுறையைப் பின்பற்றும்போது ஈரானியத் தலைநகர் தெஹ்ரானிலிருந்து லெபனான் தலைநகர் பெய்ரூட்டுக்குச் சென்று கொண்டிருந்துள்ளது.
விமானத்தின் உயரத்தை விமானம் மாற்றும்போது தனது தலையானது விமானத்தின் கூரையை முட்டியதாக பயணியொருவர் தெரிவித்ததாக ஈரானின் உத்தியோகபூர்வமான ஐ.ஆர்.ஐ.பி செய்தி முகவரகம் செய்தி வெளியிட்டிருந்ததுடன், முதியவரொருவர் வீழ்ந்து கிடக்கும் காணொளியொன்றும் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், சிலர் சிறிய காயங்களுடனாக அனைத்துப் பயணிகளும் விமானத்தை விட்டு வெளியேறியதாக பெய்ரூட் விமானநிலையத் தலைவர் தெரிவித்ததுடன், விமானம் தெஹ்ரானுக்கு இன்று அதிகாலை மீண்டும் வந்ததாக பார்ஸ் செய்தி முகவரகம் செய்தி வெளியிட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .