Editorial / 2019 ஒக்டோபர் 29 , பி.ப. 03:26 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஈராக்கிய அரசாங்கத்துக்கு எதிரான நேற்றுநான்காம் நாள் ஆர்ப்பாட்டத்தில் நால்வர் கொல்லப்பட்டதுடன், 277 பேர் காயமடைந்துள்ள நிலையில், தலைநகர் பக்தாத்தில் ஊரடங்கொன்றை ஈராக் நேற்று முன்தினம் பிரகடனப்படுத்தியுள்ளது.
இலங்கை நேரப்படி இன்று அதிகாலை 2.30 மணியிலிருந்து காலை 8.30 மணி வரை காலவரையற்ற ஊரடங்கொன்றை பக்தாத்தின் உயர் இராணுவத் தளபதி விதித்துள்ளதாக அரச தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.
எனினும், பக்தாத்தின் மத்திய தஹ்ரிர் சதுக்கத்திலுள்ள ஆர்ப்பாட்டக்காரர்கள் உறுதியாக உள்ளனர்.
தஹ்ரிர் சதுக்கத்திலிருந்து தங்களை பாதுகாப்புப் படைகள் வெளியேற்றுவதற்கான கவசமாக ஊரடங்கு உள்ளது எனத் தெரிவித்த ஆர்ப்பாட்டக்காரர்கள், தாங்கள் எங்கும் செல்லப்போவதில்லை என தெரிவித்துள்ளனர்.
பக்தாத்தில் நேற்று முன்தினம் மூவர் கொல்லப்பட்டதுடன் 224 பேர் காயமடைந்திருந்தனர். ஆர்ப்பாட்டக்காரர்களின் தலைகளை நோக்கி நேரடியாக கண்ணீர்ப்புகை கொள்கலன்களை பாதுகாப்புப் படைகள் பிரயோகித்தமையாலேயே இறப்புகள் ஏற்பட்டதாக பாதுகாப்பு மற்றும் மருத்துவ தகவல் மூலங்கள் தெரிவித்துள்ளன.
இந்நிலையில், புனித ஷியா நகரமான கெர்பாலாவிலேயே ஆர்ப்பாட்டக்காரர்களை கலைப்பதற்கு துப்பாக்கிப் பிரயோகத்தை பொலிஸார் மேற்கொண்டிருந்த நிலையில் நான்காவது நபர் கொல்லப்பட்டிருந்ததுடன், கவலைக்கிடமான நிலையிலுள்ள ஆறு பேர் உள்ளடங்கலாக 53 பேர் காயமடைந்திருந்ததாக பாதுகாப்பு மற்றும் மருத்துவத் தகவல் மூலங்கள் கூறியுள்ளன.
அந்தவகையில், மொத்தமாக இம்மாதம் கலகங்களில் 235 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், ஊரடங்கு அறிவிக்கப்பட்ட சிறிது நேரத்தில் முற்கூட்டிய தேர்தல்களுக்கு, ஈராக்கியப் பிரதமர் ஆதில் அப்துல் மஹ்டியின் கூட்டணி அரசாங்கம் பதவிக்கு வருவதற்கு உதவியிருந்த நாடாளுமன்றத்தின் மிகப் பெரிய கட்சிக்கு ஆதரவளிக்கும் பிரபலமான ஷியா மதகுருவான மொக்டடா அல்-சதார் அழைப்பு விடுத்துள்ளார்.
5 hours ago
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
8 hours ago
8 hours ago