Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 ஓகஸ்ட் 09 , பி.ப. 03:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐக்கிய அமெரிக்காவில் கொவிட்-19 தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கையானது இலங்கை நேரப்படி இன்று காலை 8.55 மணி வரையில் 5,014,339ஆகக் காணப்பட்டிருந்ததுடன், கொவிட்-19-ஆல் உயிரிழந்தோரின் எண்ணிக்கையானது 162,105ஆகக் காணப்பட்டிருந்தது.
அந்தவகையில், ஐக்கிய அமெரிக்காவில் 66 பேரில் ஒருவர் கொவிட்-19 தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.
பிரேஸில் சுகாதாரமைச்சானது கடந்த 24 மணித்தியாலங்களில் 49,970 புதிய கொவிட்-19 தொற்றுக்களையும், 905 புதிய கொவிட்-19-ஆலான உயிரிழப்புகளையும் நேற்று பதிவுசெய்த நிலையில், அங்கு கொவிட்-19 தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கையானது மூன்று மில்லியனைத் தாண்டியுள்ளதுடன், கொவிட்-19-ஆல் உயிரிழந்தோரின் எண்ணிக்கையானது 100,477ஆக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் கொவிட்-19 தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கையானது இன்று காலை எட்டு மணி வரையில் 64,399-ஆல் அதிகரித்து 2,153,010ஆகக் காணப்படுவதுடன், கொவிட்-19-ஆல் உயிரிழந்தோரின் எண்ணிக்கையானது 861-ஆல் உயர்ந்து 43,379ஆகக் காணப்படுகிறது.
ரஷ்யாவானது இன்று புதிதாக 5,189 கொவிட்-19 தொற்றுக்களைபதிவுசெய்த நிலையில் அங்கு கொவிட்-19 தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கையானது 887,536ஆக அதிகரித்ததுடன், கொவிட்-19-ஆல் உயிரிழந்தோரின் எண்ணிக்கையானது கடந்த 24 மணித்தியாலங்களில் 77-ஆல் அதிகரித்ததாக அந்நாட்டு கொவிட்-19 செயலணி தெரிவித்த நிலையில் அங்கு கொவிட்-19-ஆல் உயிரிழந்தோரின் எண்ணிக்கையானது 14,931-ஆக அதிகரித்துள்ளது.
அந்தவகையில், உலகளாவிய ரீதியில் கொவிட்-19 தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கையானது 20 மில்லியனை நெருங்குவதுடன், கொவிட்-19-ஆல் உயிரிழந்தோரின் எண்ணிக்கையானது 727,000ஐத் தாண்டியுள்ளது.
2 hours ago
2 hours ago
2 hours ago
18 Sep 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago
18 Sep 2025