2021 ஏப்ரல் 21, புதன்கிழமை

கணணி மீறலூடாக நீர் விநியோகத்தை நஞ்சூட்ட முயன்ற ஹக்கர்கள்

Shanmugan Murugavel   / 2021 பெப்ரவரி 09 , பி.ப. 12:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஐக்கிய அமெரிக்காவின் புளோரிடாவின் தம்பாவுக்கு அருகிலுள்ள ஏறத்தாழ 15,000 பேருக்கு நீரை விநியோகிக்கும் கணணி அமைப்பொன்றுக்குள் நுழைந்த ஹக்கர்கள், நீர் விநியோகத்தில் அபாய மட்டத்திலான சேர்க்கைகளை சேர்க்க எதிர்பார்த்துள்ளதாக பினெல்லஸ் கவுண்டி ஷெரீஃப் பொப் குவால்டியரி நேற்று தெரிவித்துள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை முயற்சி முறியடிக்கப்பட்டதுடன், ஏனைய அமைப்புகளின் கட்டுப்பாட்டைப் பெறும் வகையில், ஒல்ட்ஸ்மார் நகரத்திலுள்ள வசதியிலுள்ள பணியாளரொருவரின் கணணியிலுள்ள டீம் வியூவரின் கட்டுப்பாட்டை ஹக்கர்கள் பெற்றதாக நேர்காணலொன்றில் குவால்டியரி கூறியுள்ளார்.

பின்னர் சோடியம் ஹைட்ரோஸைட்டின் அளவை ஹக்கர்கள் அதிகரித்துள்ளனர். நீரின் அமிலத்தன்மையைக் கட்டுப்படுத்த சிறிய அளவிலேயே குறித்த இரசாயனம் பயன்படுத்தப்படுவதுடன், இதன் உயர் மட்டமானது உள்ளெடுப்பதற்கு ஆபத்தானதாகும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .