2020 ஓகஸ்ட் 15, சனிக்கிழமை

‘கொரோனாவைரஸின் தடுப்பு மருந்து 18 மாதங்களில்’

Editorial   / 2020 பெப்ரவரி 12 , பி.ப. 08:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

விழித்தெழுந்து, புதிய கொரோனாவைரஸை பொதுமக்களின் முதலாவது எதிரியாக உலகம் கருத்திற்கொள்ள வேண்டும் என செய்தியாளர்களிடம் நேற்றுத் தெரிவித்த உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் டெட்றோஸ் அடம் கிறபைஸஸ், முதலாவது தடுப்புமருந்தைக் கண்டுபிடிக்க 18 மாதங்கள் செல்லும் எனக் கூறியுள்ளார். 

சீன சுகாதார அதிகாரிகளின் தகவல்படி, நேற்று உறுதிப்படுத்தப்பட்ட கொரோனாவைரஸால் பீடிக்கப்ப்பட்ட 2,015 பேர் உள்ளடங்கலாக தற்போது கொரோனாவைரஸானது சீனாவில் 44,653 பேரைப் பீடித்துள்ளது.

இதேவேளை, நேற்றைய முடிவில் கொரோனாவைரஸால் உயிரிழந்தோரின் எண்ணிக்கையானது 97ஆல் உயர்ந்து 1,113ஐ எட்டியுள்ளது.

இந்நிலையில், நிலைமை கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாக சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளபோதும், பயங்கரவாதத்தை விட மோசமான பூகோளப் பாதிப்பொன்றை கொரோனாவைரஸ் வழங்குவதாக உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரித்துள்ளது.

இதேவேளை, ஜப்பானியத் துறைமுகமாக யொகொஹமாவில் ஏறத்தாழ 3,700 பேருடன் தனிமைப்படுத்தப்பட்டுள்ள டயமன்ட் பிறின்ஸஸ் பயணிகள் கப்பலில் மேலும் 39 பேருக்கு கொரோனாவைரஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஜப்பானிய அதிகாரிகள் இன்று தெரிவித்துள்ள நிலையில் அக்கப்பலில் மொத்தமாக 175 பேர் கொரோனாவைரஸால் பீடிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் புதிய கொரோனாவைரஸானது COVID-19 என உத்தியோகபூர்வமாக பெயரிடப்பட்டுள்ளது. இதில், COஆனது கொரோனாவாகவும், VIஆனது வைரஸையும், Dஆனது நோயையும், 19ஆனது புதிய கொரோனாவைரஸ் கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டையும் குறிக்கிறது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--