Editorial / 2020 ஏப்ரல் 09 , பி.ப. 09:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொவிட்-19 வைரஸ் தொற்று நோயின் இரண்டாவது அலை ஏற்படவுள்ளதாகவும் அது, புதிய சவால்கள் மற்றும் புதிய சிரமங்களை ஏற்படுத்தும் என, சீன ஜனாதிபதி ஷீ ஜின் பிங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில், சீன அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ செய்திச் சேவையான ஷிங்சூவா வெளியிட்டுள்ள செய்தியில், உயர்மட்டத் தீர்மானங்களை எடுக்கும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோ நேற்று (08) கூடிய போதே சீன ஜனாதிபதி இதனை குறிப்பிட்டதாகத் தெரிவித்துள்ளது.
உலகப் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து சென்றுக் கொண்டிருக்கும் நேரத்தில், ஸ்திரமின்மை மற்றும் நிச்சயமற்ற பல காரணிகள் தலைத்தூக்கி வருகின்றன எனவும் சீன ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
சீனாவில் கொரோனா வைரஸ் தொற்று தலைத்தூக்கிய வூஹான் நகரம், நேற்று முன்தினம் மீண்டும் திறக்கப்பட்டதை அடுத்து, சீனாவை உலகம் சிறந்த கண்ணோட்டத்துடன் பார்த்தாலும், ஆபத்து புதிய தோற்றத்தில் தலைத்தூக்கக் கூடும் என்பது சீன ஜனாதிபதியின் கருத்துகள் மூலம் எச்சரிக்கப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் இருந்து வரும் சீனப் பிரஜைகள் குறித்து தொடர்ந்தும் அவதானத்துடன் இருக்குமாறும் சீன ஜனாதிபதி தனது அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
எந்த வகையில் கொவிட்-19 என்ற கொரோனா வைரஸின் இரண்டாவது அலையின் தாய் வீடாக சீனா இருக்கக் கூடாது எனவும், சீன ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
48 minute ago
1 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
48 minute ago
1 hours ago
2 hours ago
3 hours ago