2020 பெப்ரவரி 18, செவ்வாய்க்கிழமை

கஷொக்ஜி கொல்லப்படுவதற்கு முன்னரான ஒலிப்பதிவுக் குறிப்புகள் வெளியாகின

Editorial   / 2019 செப்டெம்பர் 10 , பி.ப. 08:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

சவூதி அரேபிய ஊடகவியலாளர் ஜமால் கஷொக்ஜி, துருக்கியின் இஸ்தான்புல்லிலுள்ள சவூதி அரேபிய துணைத் தூதரகத்தில் அவரைக் கொன்ற சவூதி அரேபிய கொலைக் குழாமின் ஒலிப்பதிவுக் குறிப்புகளை துருக்கிய டெய்லி சபாஹ் பத்திரிகையானது வெளியிட்டுள்ளது.

துருக்கிய தேசிய புலனாய்வு நிறுவனத்தால் பெறப்பட்ட ஒலிப்பதிவுகள், டெய்லி சபாஹ்வால் நேற்று முன்தினம் பொதுவெளியில் பிரசுரிக்கப்பட்டிருந்த நிலையில், கஷொக்ஜிக்கும், 15 உறுப்பினர்களைக் கொண்ட கொலைக் குழாமுக்குமிடையே அவர் கடந்தாண்டு ஒக்டோபர் இரண்டாம் திகதி கொல்லப்படுவதற்கு முன்னைய தருணங்களில் இடம்பெற்ற கலந்துரையாடல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

ஐக்கிய அமெரிக்காவில் வசித்த கஷொக்ஜி கொல்லப்பட்ட பின்னர் அவரது சடலம் அகற்றப்பட்டிருந்தது.

துணைத் தூதரகத்துக்குள் நுழைந்தபோது தெரிந்த முகமொன்றால் வரவேற்கப்பட்ட கஷொக்ஜி பின்னர் அறையொன்றுக்குள் இழுத்துச் செல்லப்பட்டதாக டெய்லி சபாஹ் தெரிவித்துள்ளது.

உன்னை சவூதி அரேபியாவுக்கு கொண்டு செல்ல வேண்டுமென்று சவூதி அரேபியாவின் சிரேஷ்ட புலனாய்வு அதிகாரியும், சவூதி அரேபியாவின் முடிக்குரிய இளவரசர் மொஹமட் பின் சல்மானின் மெய்ப்பாதுகாவலரான மஹெர் அப்துல்லாஸிஸ் முட்ரெப் தெரிவித்துள்ளதுடன், அவர் கொல்லப்படுவதற்கு முன்னர் உனது மகனதுக்கு செய்தியொன்றை விட்டுச் செல்லுமாறும் உன்னை அடையாவிட்டால் கவலைப்பட வேண்டாம் என்று கூறுமாறும் வினவியுள்ளார்.

கஷொக்ஜி மறுத்த நிலையில் தங்களக்கு உதவவாவிட்டால் என்ன நடக்கும் என நீ அறிவாய் என்று அப்துல்லாஸிஸ் முட்ரெப் தெரிவித்துள்ளதுடன், இறுதியாக தான் அஸ்மாவைக் கொண்டிருப்பதாகவும், இதைச் செய்ய வேண்டாமெனவும் தன்னை மூச்சடைக்கச் செய்வீர்கள் என கஷொக்ஜி தெரிவித்துள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .