2020 ஜூலை 07, செவ்வாய்க்கிழமை

சிரியாவில் கார்க் குண்டுத் தாக்குதலில் 13 பேர் பலி

Editorial   / 2019 நவம்பர் 03 , பி.ப. 06:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

துருக்கியுடனான எல்லையுடனுள்ள சிரிய நகரமான தல் அப்யட்டில், கார்க் குண்டு வெடிப்பொன்றில் குறைந்தது 13 பேர் கொல்லப்பட்டதாக துருக்கிய பாதுகாப்பமைச்சு தெரிவித்துள்ளது.

முன்னர் குர்திஷ்களால் கட்டுப்படுத்தப்பட்டிருந்து துருக்கியால் கடந்த மாதம் கைப்பற்றப்பட்ட சில நகரங்களில் ஒன்றான தல் அப்யட்டை குறித்த குண்டு வெடிப்பானது நேற்று சிதைத்திருந்தது.

முதல் கண்டுபிடிப்புகளின் அடிப்படையில், வடகிழக்கு சிரிய நகரமான தல் அபயட்டில் குண்டு வெடிப்பில் 13 பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும், ஏறத்தாழ வேறு 20 பேர் காயமடைந்ததாக அறிக்கையொன்றில் துருக்கி பாதுகாப்பமைச்சு நேற்று  தெரிவித்துள்ளது.

இந்நிலையில், கார்க் குண்டுவெடிப்பில் இறந்தோர் மற்றும் காயமடைந்தோரில் துருக்கிக்கு ஆதரவான போராளிகளும், பொதுமக்களும் உள்ளடங்குவதாக, பிரித்தானியாவைத் தளமாகக் கொண்ட மனித உரிமைகளுக்கான சிரியக் கண்காணிப்பகம் கூறியுள்ளது.

இதேவேளை, குறித்த தாக்குதலுக்கு இதுவரையில் எக்குழுவும் உரிமை கோரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .