2021 மார்ச் 01, திங்கட்கிழமை

சுரங்கப் பணியாளர்களிடமிருந்தான குறிப்பால் மீட்புக்கான நம்பிக்கை

Shanmugan Murugavel   / 2021 ஜனவரி 18 , பி.ப. 02:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சீன தங்கச் சுரங்கமொன்றில் வெடிப்பொன்றையடுத்து ஒரு வாரத்துக்கு முன்னர் நிலத்தடியில் சிக்கியுள்ள 12 பணியாளர்கள் இன்னும் உயிருடன் இருப்பதாக மீட்புப் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

விபத்து இடம்பெற்று ஏழு நாள்களின் பின்னர் குறிப்பொன்றை பணியாளர்களால் அனுப்ப முடிந்ததாக சீன அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், வெடிப்பொன்றையடுத்து காணாமல்போன இன்னொரு 10 சுரங்கப் பணியாளர்களின் நிலை இன்னும் தெளிவில்லாமலுள்ளது.

கிழக்கு சீனாவிலுள்ள ஷன்டொங் மாகாணத்திலுள்ள யன்டாய்க்கு அருகிலுள்ள ஹுஷன் சுரங்கத்தின் வெளியேறும் பகுதி, தொடர்பாடல் அமைப்புகளானது வெடிப்பொன்றையடுத்து இம்மாதம் 10ஆம் திகதி சேதமடைந்ததையடுத்து அங்கு 22 பேர் சிக்கியிருந்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .