2020 பெப்ரவரி 18, செவ்வாய்க்கிழமை

ஜம்மு காஷ்மிரில் 40 பயங்கரவாதிகள் ஊடுருவல்?

Editorial   / 2019 செப்டெம்பர் 11 , பி.ப. 07:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தானை சேர்ந்த 40 பயங்கரவாதிகள், எல்லை தாண்டி ஜம்மு காஷ்மிருக்குள் ஊடுருவி உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

புலனாய்வுத் துறையினர் விடுத்த குறித்த எச்சரிக்கையைத் தொடர்ந்து ஜம்மு காஷ்மிர் மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்தியாவுக்குள் ஊடுருவிய பயங்கரவாதிகள், பயிற்சி பெற்றவர்கள் எனவும் ஆயுதங்கள் வைத்துள்ளதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எல்லைக்கு அப்பால் இருந்து காஷ்மிருக்குள் ஊடுருவ பயங்கரவாதிகள் மேற்கொண்ட ஏராளமான முயற்சிகளை இந்திய இராணுவம் முறியடித்தது. இருப்பினும், பயங்கரவாதிகளின் ஒரு சில முயற்சிகள் வெற்றி பெற்றுள்ளதாகவும், பாதுகாப்பு படையினர் உஷாராக உள்ளதாவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், சோபோரேயில் அண்மையில் இடம்பெற்ற தாக்குதலொன்றில் பங்கெடுத்திருந்த லக்‌ஷர்-ஈ-தொய்பா பயங்கரவாதியொருவர் சோபோரேயில் பாதுகாப்புப் படைகளால் நேற்று சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். சம்பவம் இடம்பெற்ற நடந்த கிரனேட் வெடிப்பொன்றில் காயமடைந்த பொலிஸார் இரண்டு பேரும் ஆபத்தான கட்டத்தைத் தாண்டியுள்ளனர்.

பெற்ற தகவலின் அடிப்படையில் பாதுகாப்புப் படைகள் இயங்கி சோபேரேயில் தேடுதல் மற்றும் சுற்றிவளைப்பை மேற்கொண்டபோதே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .