2020 மே 28, வியாழக்கிழமை

தென் சூடான் மோதல்களில் 300 பேர் பலி

Editorial   / 2020 மே 21 , பி.ப. 07:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

தென் சூடானில் சமூகங்களுக்கிடையிலான புதிய மோதல்களில் குறைந்தது 300 பேர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஜொங்லெய் மாநிலத்தில் டசின் கணக்கான வீடுகள் அழிக்கப்பட்டதுடன், தொண்டு நிறுவனங்களுக்குச் சொந்தமான கொள்கலன் தொகுதிகள் களவாடப்பட்டதுடன், பெண்கள் மற்றும் மந்தைகள் கடத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை, கொல்லப்பட்டவர்களுள் மூன்று தொண்டுப் பணியாளர்களும் உள்ளடங்குகின்றனர்.

தென் சூடானின் சிவில் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதை நோக்காகக் கொண்ட சமாதான ஒப்பந்தம் இவ்வாண்டு பெப்ரவரி மாதம் கைச்சாத்திடப்பட்டபோதும், அதன் பின்னர் குறிப்பிட்ட எண்ணிக்கையான தடவைகள் சமூகங்களுக்கிட்டையிலான வன்முறைகள் வெடித்துள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 

X

X