2020 ஒக்டோபர் 24, சனிக்கிழமை

தாய்லாந்தில் 3 நாள்களாக ஊரடங்குச்சட்டம் அமுலில்

Super User   / 2010 மே 20 , மு.ப. 04:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

தாய்லாந்து தலைநகர் பாங்கொக்கில் தொடர்ந்து 3 நாள்களாக இரவில் ஊரடங்குச்சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையில், செஞ்சட்டை ஆர்ப்பாட்டக்காரர்களின் தலைவர்கள் நேற்று தாய்லாந்து பொலிஸாரிடம் சரணடைந்துள்ளனர். மேற்படி ஆர்ப்பாட்டக்காரர்களை முகாமிலிருந்து வெளியேற்றும் முகமாக தாய்லாந்து இராணுவத்தினர் தாக்குதல் நடத்தியதை அடுத்தே இவர்கள் சரணடைந்துள்ளனர்.

இது இவ்வாறிருக்குக்க,  மேற்படி மோதலில் 3 ஊடகவியலாளர்கள் தாக்குதலுக்கு உள்ளாகியிருந்ததுடன், அவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற தாக்குதலில் சுமார் 14 பொதுமக்கள் கொல்லப்பட்டிருக்கும் அதேவேளை, கடந்த வாரம் முதல் இடம்பெற்றுவரும் மோதலில் இதுவரையில் 40 பேர் கொல்லப்பட்டிருக்கின்றனர்.

தாய்லாந்து அரசாங்கத்தை பதவியிலிருந்து விலகுமாறும், புதிதாக தேர்தலொன்றை நடத்துமாறும் கோரி தாய்லாந்து தலைநகர் பாங்கொக்கில் செஞ்சட்டை ஆர்ப்பாட்டக்காரர்கள் கடந்த 2 மாதங்களாக  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

எனினும், தனது பதவியை இராஜினமாச் செய்யப் போவதில்லை என தாய்லாந்துப்  பிரதமர் அபிஸிட் விஜ்ஜீவா முன்னர் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--