2020 ஒக்டோபர் 28, புதன்கிழமை

தென்சீனாவில் மண்சரிவு;20 பொதுமக்கள் உயிரிழப்பு

Super User   / 2010 ஜூன் 03 , மு.ப. 07:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென் சீனாவில் தொடர்ந்து பெய்து வரும் கடும் மழை காரணமாக ஏற்பட்டிருக்கும் மண்சரிவால் 20 பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.

மேற்படி மண்சரிவில் 27 பொதுமக்கள் புதையுண்டிருப்பதாகவும், அவர்களைத்   தேடும் நடவடிக்கையில் மீட்புப் பணியாளர்கள் ஈடுப்பட்டிருப்பதாகவும்  அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதேவேளை, மழை காரணமாக 66,000 பொதுமக்கள் தமது வீடுகளை விட்டு வெளியேறியிருப்பதுடன், 3,260 வீடுகள் சேதமடைந்துள்ளன.

இதற்கிடையில், தொடர்ந்து பெய்து வரும் மழையால் சீனாவின் பொருளாதாரத்தில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளன.

தென் சீனாவில் கடந்த திங்கட்கிழமை முதல்  கடும் மழை பெய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--