2021 பெப்ரவரி 24, புதன்கிழமை

தென் டார்ஃபரில் வைரிக் குழுக்களுக்கிடையிலான மோதல்களில் 55 பேர் பலி

Shanmugan Murugavel   / 2021 ஜனவரி 19 , மு.ப. 04:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சூடானின் தென் டார்ஃபர் மாநிலத்தில் வைரி இனக்குழுக்களுக்கிடையிலான மோதல்களில் 55 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேற்கு டார்ஃபர் மாநிலத்தில், கடந்த சனிக்கிழமையும், நேற்று முன்தினமும் எதிரி இனக்குழுக்களுக்கிடையிலான மோதல்களில் குறைந்தது 83 பேர் கொல்லப்பட்ட மறுநாளான நேற்று அதிகாலையிலேயே குறித்த மோதல் வெடித்துள்ளது.

றிஸெய்கட் பழங்குடியினத்துக்கும், பலட்டா பழங்குடியினத்துக்குமிடையிலான மோதல்களில் 55 பேர் கொல்லப்படதாகவும், 37 பேர் காயமடைந்ததாகவும் உள்ளூர் பலட்டா தலைவர் மொஹமட் சாலேஹ் தெரிவித்துள்ளார்.

தாக்குதலில் சில வீடுகள் எரிக்கப்பட்டதாகவும் சாலேஹ் மேலும் கூறியுள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .