Editorial / 2020 ஓகஸ்ட் 10 , பி.ப. 02:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
பெலாரஸின் தலைநகர் மின்ஸ்கிலும், ஏனைய நகரங்களிலும் ஆர்ப்பாட்டக்காரர்களும், கலகமடக்கும் பொலிஸாரும் மோதுண்டுள்ளனர்.
பெலாரஸின் நீண்டகால ஜனாதிபதியான அலெக்ஸான்டர் லுகஷென்கோ நேற்றையத் தேர்தலில் மீளத் தேர்ந்தெடுக்கப்படுவதாக அரச தொலைக்காட்சியொன்றின் கருத்துக்கணிப்பு வெளிப்படுத்தியதைத் தொடர்ந்தே குறித்த மோதல்கள் இடம்பெற்றுள்ளன.
சத்த கிரனேட்களையும், இறப்பர் குண்டுகளையும், நீர்த்தாரையையும் பொலிஸார் பயன்படுத்தியிருந்தனர்.
இந்நிலையில், ஒரு ஆர்ப்பாட்டக்காரரொருவர் கொல்லப்பட்டதாகவும், 120 பேரளவில் கைதுசெய்யப்பட்டதாகவும் மனித உரிமைகள் குழுவொன்று தெரிவித்துள்ளது.
ஆரம்பகட்ட வாக்கெண்ணிக்கையின்படி 80 சதவீதமான வாக்குகளை ஜனாதிபதி அலெக்ஸான்டர் லுகஷென்கோ பெற்றுள்ளார்.
ஏவ்வாறெனினும், முடிவுகளை அங்கிகரிக்க பிரதான எதிர்க்கட்சித் தலைவரான ஸ்வெட்லனா திகனோவ்ஸ்கயா மறுத்துள்ளார்.
ஆரம்பகட்ட முடிவுகளின்படி 9.9 சதவீதமான வாக்கை ஸ்வெட்லனா திகனோவ்ஸ்கயா பெற்றுள்ள நிலையில் அவர் சில பகுதிகளில் 70 சதவீதம் தொடக்கம் 80 சதவீதமான வாக்குகளைப் பெற்றதாக அவரது பிரசார முகாம் தெரிவித்துள்ளது.
சிறையிலடைக்கப்பட்ட தனது கணவரில் இடத்திலேயே திகனோவ்ஸ்கயா தேர்தலில் நுழைந்ததுடன், பாரிய எதிரணிப் பேரணிகளுக்கு தலைமை தாங்கியிருந்தார்.
3 hours ago
3 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
7 hours ago