Shanmugan Murugavel / 2021 பெப்ரவரி 10 , மு.ப. 10:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாராளுமன்றத்தில் டை அணிய மறுத்ததால், நியூசிலாந்து மாவோரித் தலைவரான றவிரி வைடிடி இவ்வாரம் வெளியேற்றப்பட்டுள்ளார்.
இந்நிலையில், மேற்கத்தேய ஆடைகளை அணியத் தன்னை வலியுறுத்துவதானது தனது உரிமைகளின் மீறலொன்று எனவும், பழங்குடியினக் கலாசாரத்தை ஒடுக்குவதற்கான முயற்சியொன்று என வைடிடி தெரிவித்துள்ளார்.
விவாதித்த பாராளுமன்றத்தில் வைடிடி கேள்விகளைக் கேட்பதை நேற்று இரண்டு தடவைகள் தடுத்த சபாநாயகர் ட்ரெவர் மல்லார்ட், டை அணிந்திருந்தாலே நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்வியொன்றைக் கேட்கலாமென வலியுறுத்தியிருந்தார்.
இந்நிலையில், இரண்டாவது தடவை நிறுத்தப்பட்ட பின்னரும் தனது கேள்வியை வைடிடி தொடர்ந்த நிலையில், அவரை வெளியேறுமாறு மல்லார்ட் உத்தரவிட்டுருந்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .