2020 மே 26, செவ்வாய்க்கிழமை

பிரெக்சிற் பேச்சுக்கள் முறிவடையும் தறுவாயில்

Editorial   / 2019 ஒக்டோபர் 09 , பி.ப. 10:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரித்தானியாவின் ஐரோப்பிய ஒன்றியத்துடனான ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறும் (பிரெக்சிற்) பேச்சுக்கள் முறிவடையும் தறுவாயில் நேற்று  காணப்படுகின்றன.

பெல்ஜியத் தலைநகர் ப்ரஸெல்ஸில் அடுத்த வாரம் இடம்பெறவுள்ள ஐரோப்பிய ஒன்றிய மாநாட்டுக்கு முன்பாக தான் முன்மொழிந்த ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவதற்கான புதிய நிபந்தனைகளை அனுமதிக்க வைக்க முயலும் பிரித்தானியப் பிரதமர் பொரிஸ் ஜோன்சன், ஜேர்மனிய சான்செலர் அங்கெலா மேர்க்கலுடன் கதைத்திருந்தார்.

இந்நிலையில், வழமைக்கு மாறான சான்செலர் அங்கெலா மேர்க்கல் தெரிவித்ததாகக் கூறப்பட்டதை பிரதமர் பொரிஸ் ஜோன்சனின் அலுவலகம் வழங்கியதைத் தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றிய சபையின் தலைவர் டொனால்ட் டஸ்க்கிடமிருந்து விமர்சிக்கும் டுவீட்டொன்று வெளிவந்திருந்தது.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவதற்கான ஒப்பந்தம் பெரும்பாலும் சாத்தியமில்லை என்பதோடு, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவதற்கான பேச்சுவார்த்தைகள் முறிவடைவதை நெருங்கியுள்ளன என சான்செலர் அங்கெலா மேர்க்கல் தெரிவித்ததாக பிரதமர் பொரிஸ் ஜோன்சனின் அலுவலக அதிகாரியொருவர் கூறியுள்ளார்.

இந்நிலையில், நம்பிக்கைக்குரியதான குறித்த கலந்துரையாடல்கள் குறித்து தாம் கருத்துத் தெரிவிக்க மாட்டோம் என சான்செலர் அங்கெலா மேர்க்கலின் அலுவலகம் தெரிவித்திருந்தது.

இதேவேளை, சான்செலர் அங்கெலா மேர்க்கலுடனான தொலைபேசி அழைப்புக் குறித்து பிரதமர் பொரிஸ் ஜோன்சனின் உத்தியோகபூர்வ பேச்சாளரும் கருத்துத் தெரிவிக்க மறுத்திருந்தார்.

இந்நிலையிலேயே, ஐரோப்பாவின் மற்றும் பிரித்தானியாவின் எதிர்காலத்துடனும் என்ன வேண்டும் என தெளிவான திட்டம் இல்லாமல் பிரித்தானியா விளையாடுவதாக டொனால்ட் டஸ்க் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதேவேளை, இன்றிலிருந்து எதிர்வரும் திங்கட்கிழமை வரை பிரித்தானிய நாடாளுமன்றத்தை பிரித்தானிய அரசாங்கம் நேற்று  ஒத்திவைத்துள்ளது.  

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 

X

X