2020 ஜூலை 07, செவ்வாய்க்கிழமை

மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்

Editorial   / 2020 ஜூன் 22 , மு.ப. 05:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின் ஜம்மு காஷ்மிரின் தலைநகர் ஶ்ரீநகரிலுள்ள ஸடிபல் சூரா பகுதியில் பாதுகாப்புப் படைகளால் மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பகுதியிலிருந்த வீடொன்றுக்குள் பயங்கரவாதிகள் இருந்ததாகத் தெரிவித்த பொலிஸார், பாதுகாப்புப் படைகளின் முன்னால் சரணடையும் வாய்ப்பை மறுத்ததாகக் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

குறிப்பிட்ட புலனாய்வுத் தகவல்களைப் பெற்ற பின்னர் சுற்றிவளைப்புத் தேடுதலொன்றை பாதுகாப்புப் படைகள் நேற்றுக் காலை ஆரம்பித்த பின்னர் குறித்த வீட்டை பாதுகாப்புப் படைகள் அண்மித்தபோது பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படைகளின் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதையடுத்தே துப்பாக்கிச்சண்டை மூண்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .