2021 மார்ச் 08, திங்கட்கிழமை

‘மூன்று மாதங்களுக்கு கண்காணிக்க இணங்கிய ஈரான்’

Shanmugan Murugavel   / 2021 பெப்ரவரி 22 , மு.ப. 04:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சர்வதேச அணு சக்தி முகவரகத்துக்கு அவசியமான சரிபார்ப்பு, கண்காணிப்பு நடவடிக்கைகளை மூன்று மாதங்கள் வரையில் தொடர்வதற்கான இணக்கமொன்றை ஈரானுடன் முகவரகம் எட்டியதாக அதன் தலைவர் றஃபெல் குறொஸி தெரிவித்துள்ளார்.

எவ்வாறெனினும், இன்றிலிருந்து குறைவான நுழைவுமே இருக்குமென்பதுடன், இனி உடனடியான சோதனைகள் இருக்காது.

அதேயளவான கண்காணிப்பாளர்களே இருப்பர் என குறொஸி தெரிவித்துள்ளபோதும், தாம் இழப்பதற்கான விடயங்கள் இருக்கும் என்று கூறியுள்ளார்.

அந்தவகையில், முகவரகமானது அணு நிலையங்களில் அதன் கமெராக்களின் காணொளியைப் பெறுவது முடக்கப்படும் என ஈரானின் வெளிநாட்டமைச்சர் ஜாவாட் ஸரிஃப் முன்னர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .