2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

மேர்க்கலுக்கடுத்த சான்செலராக வரக்கூடியவர் தொடர்பில் வருவாரா என சந்தேகங்கள்

Editorial   / 2019 ஒக்டோபர் 16 , பி.ப. 10:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜேர்மனியின் சான்செலராக அங்கெலா மேர்க்கலை அனெகிரெட் கிராம்ப்-கரென்போர் பிரதியிடுவதானது கடந்தாண்டு டிசெம்பர் மாதத்தில் ஆளும் கிறிஸ்தவ ஜனநாயகச் சங்கக் கட்சியின் தலைவராக அவர் அங்கெலா மேர்க்கலை பிரதிட்டபோது தெளிவாக இருந்தது.

ஆனால், தற்போது 10 மாதங்களின் பின்னர் ஐரோப்பிய ஒன்றியத்தின் மிகவும் பலம் வாய்ந்த, மிகப்பெரிய பொருளாதாரத்தைக் கொண்டுள்ள ஜேர்மனியை வழிநடத்த தற்போது பாதுகாப்பமைச்சராக இருக்கும் அனெகிரெட் கிராம்ப்-கரென்போர் தகுதியானவரா என அவரது கட்சியின் உறுப்பினர்கள் விவாதிக்கின்றனர்.

சமபாலின மக்கள் மீதான வேடிக்கையான கருத்துத் தெரிவித்தது உள்ளடங்கலாக குறிப்பிட்ட எண்ணிக்கையில் பொதுவெளியில் பின்னடைவுகளைச் சந்தித்ததைத் தொடர்ந்து அனெகிரெட் கிராம்ப்-கரென்போரின் ஆதரவு மட்டங்கள் வீழ்ச்சியடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அனெகிரெட் கிராம்ப்-கரென்போரின் அவதானிப்பின் கீழ் ஐரோப்பிய நாடாளுமன்றத்துக்கான தேர்தலில் கிறிஸ்தவ ஜனநாயகச் சங்கக் கட்சி இவ்வாண்டு மே மாதத்தில் தோல்விகளைச் சந்தித்திருந்ததுடன், பிராந்தியத் தேர்தல்களில் கலவையான வெற்றிகளையே பெற்றிருந்தது.

இந்நிலையில், தனது பதவிக்காலத்தை நிறைவு செய்வே என அங்கெலா மேர்க்கல் தெரிவிக்கின்ற நிலையில், வேட்பாளர் ஒருவர் தொடர்பில் இணங்குவதற்கு ஓராண்டுக்கு மேலான காலம் கிறிஸ்தவ ஜனநாயக சங்கக் கட்சியினருக்கு காணப்படுகின்ற நிலையில், அனெகிரென் கிராம்ப்-கரென்போர் தன்னை நிரூபிப்ப்பதற்கான காலத்தை இன்னும் கொண்டிருக்கின்றார் என சிரேஷ்ட கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சித் தலைவர்கள் தெரிவிக்கின்றனர்.

வழமையாக கிறிஸ்தவ ஜனநாயக சங்கக் கட்சியின் தலைவருக்கே அக்கட்சியின் சான்செலர் வேட்பாளர் தகுதி வழங்கப்படுகின்ற நிலையில் தற்போதும் அங்கெலா மேர்க்கலை பிரதியிடுவதற்கான போட்டியில் முன்னிலையிலேயே அனெகிரெட் கிராம்ப்-கரென்போர் காணப்படுகின்றார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .