2021 ஏப்ரல் 19, திங்கட்கிழமை

மே. கரையில் போர்க்குற்ற விசாரணையை ஆரம்பித்த குற்றவியல் நீதிமன்றம்

Shanmugan Murugavel   / 2021 மார்ச் 04 , பி.ப. 12:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பலஸ்தீனப் பிராந்தியங்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் குறித்து உத்தியோகபூர்வமானதொரு விசாரணையை, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் சட்டமா அதிபர் படெள பென்செளடா ஆரம்பித்துள்ளார்.

இஸ்ரேலிய ஆக்கிரமிப்பின் கீழுள்ள மேற்குக் கரை, கிழக்கு ஜெருசசேலம், காஸாவில், 2014ஆம் ஆண்டு முதலான நிகழ்வுகளை விசாரணை கருத்தில் கொள்ளுமென பென்செளடா தெரிவித்துள்ளார்.

பென்செளடாவின் தீர்மானத்தை இஸ்ரேல் நிராகரித்துள்ளதுடன், பலஸ்தீன அதிகாரிகள் வரவேற்றுள்ளனர். ஏமாற்றத்தை வெளிப்படுத்திய ஐ. அமெரிக்கா, இதற்கு எதிராகவுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .