2020 மே 28, வியாழக்கிழமை

ரஷ்யா அறிக்கையை வெளிப்படுத்துவதை முடக்கிய உச்ச நீதிமன்றம்

Editorial   / 2020 மே 21 , பி.ப. 05:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஐக்கிய அமெரிக்காவின் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் நிர்வாகத்தால் திருத்தப்பட்ட அந்நாட்டு 2016ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் ரஷ்ய இடையூறை ஆவணப்படுத்திய முன்னாள் சிறப்பு வழக்குத் தொடருநர் றொபேர்ட் மல்லரின் அறிக்கையை ஜனாநாயக் கட்சி தலைமையிலான பிரதிநிதிகள் சபை செயற்குழுவொன்றுக்கு வெளிப்படுத்துவதை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் நேற்று  முடக்கியுள்ளது.

பிரநிதிகள் சபை உறுப்பினர்களுக்கு குறித்த ஆவணம் வெளிப்படுத்தப்பட வேண்டும் என கொலம்பியா மாவட்ட ஐக்கிய அமெரிக்க மேன்முறையீட்டு நீதிமன்ற இவ்வாண்டு மார்ச் மாத உத்தரவொன்றை நீதியரசர்கள் இடைநிறுத்தியுள்ளனர்.

இந்நிலையில், தீர்ப்புக்கெதிராக அடுத்த மாதம் முதலாம் திகதி வரை உத்தியோகபூர்வமான மேன்முறையீடு செய்வதற்கு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்துக்கு கால அவகாசம் வழங்கப்ப்பட்டுள்ளது.

அந்தவகையில், இந்த வழக்கை விசாரிக்க நீதியரசர்கள் தீர்மானித்தால், இறுதித் தீர்மானமொன்று இவ்வாண்டு நவம்பர் மாதம் மூன்றாம் திகதி நடைபெறவுள்ள ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலுக்கு முன் கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 

X

X