2025 டிசெம்பர் 27, சனிக்கிழமை

‘ராகுல் காந்தியை காணவில்லை’

Editorial   / 2017 ஓகஸ்ட் 08 , பி.ப. 11:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

லக்னோ மாவட்டத்தின் அமேதி நகரத்தில், “ராகுல் காந்தியைக்
காணவில்​லை” என்று சுவரொட்டிகள் ஒட்டப்பட்டள்ளமையால் பரபரப்பு ஏற்பட்டது.  

தங்களது தொகுதி எம்.எல்.ஏ அல்லது எம்.பிக்கள், தொகுதியைக் கண்டுக்கொள்ளாமல் இருந்தால், தேர்தல் வரை காத்திருக்காத வாக்காளர்கள், இது தொடர்பாக பதாதை எழுதி ஒட்டுவிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். தொகுதிப் பக்கம் தலையைக் காட்டாத மக்கள் பிரதிநிதிகளை, காணவில்லை” என்று, அடிக்கடி சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன.  

இந்நிலையில், தேசிய காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்திக்கு, அவரது எம்.பி தொகுதியான அமேதியில், சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.  

அந்தப் பதாதையில், “ராகுல் காந்தியைக் காணவில்லை. அமேதி தொகுதி எம்.பி ராகுல் காந்தி, தொகுதிக்கு வருவதில்லை. அவர் வராத காரணத்தினால், அமேதி தொகுதியின் வளர்ச்சிப் பணிகள் மிகவும் பாதிப்படைந்துள்ளன. அவர், அமேதி தொகுதி மக்களை அவமானப்படுத்தியுள்ளார். எங்களுக்கு நம்பிக்கைத் துரோகம் செய்துள்ளார். ராகுல் காந்தியைக் கண்டுபிடித்துத் தருபவர்களுக்கு, தக்க சன்மானம் வழங்கப்படும். இவன் அமேதி தொகுதி மக்கள்” என்று, குறிப்பிடப்பட்டுள்ளது.  

காங்கிரஸ் துணைத் தலைவரும் அமேதி தொகுதியின் எம்.பியான ராகுல் காந்தி, கிட்டத்தட்ட ஒரு வருடமாக, அமேதிக்குச் செல்லவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், “ராகுல் காந்தியைக் காணவில்லை” என்று ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளால், அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X