Editorial / 2017 ஜூன் 16 , மு.ப. 09:32 - 0 - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில், சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினி, தன்னை புழல் சிறைச்சாலைக்கு மாற்றுமாறு கோரி, உண்ணாவிரதம் இருந்து வருகின்றார்.
இந்தக் கொலை வழக்கில், பேரறிவாளன், முருகன், சாந்தன் மற்றும் நளினி ஆகியோர் சிறையில் இருந்து வருகின்றனர்.
நளினி, வேலூர் பெண்கள் சிறையில் இருந்துவருகிறார். தற்போது அவர், தன்னை புழல் சிறைக்கு மாற்றக் கோரி, சிறைத்துறைக்கு, கடிதம் எழுதியுள்ளார். அவர் எழுதியுள்ள கடிதத்தில், “தனது மகளுக்கு திருமணம் நடைபெறவுள்ளது. புழல் சிறையில் இருந்தால், திருமணத்துக்கு உதவுவதற்கு ஏதுவாக இருக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தனது கோரிக்கை மனுவின் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ள அவர், உண்ணாவிரத்தில் ஈடுபட்டுள்ளார்.
3 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago
6 hours ago