2020 ஜூலை 07, செவ்வாய்க்கிழமை

வாகனங்களை எல்லைக்கருகில் நகர்த்திய சீனா

Editorial   / 2020 ஜூன் 22 , மு.ப. 05:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீன மக்களின் விடுதலை இராணுவமானது கல்வான் பள்ளத்தாக்குக்கு ஒரு வாரத்தில் 200க்கும் மேலான ட்ரக்குகள், நான்கு சக்கர வாகனங்கள், புல்டோஸர்கள், நிலத்தை நகர்த்து உபகரணத்தை நகர்த்தியுள்ளது.

சீனாவால் இம்மாதம் ஒன்பதாம் திகதிக்கும் 16ஆம் திகதிக்குமிடையே மேற்கொள்ளப்பட்ட நகர்வுகளின் நீட்சியை செய்மதிப் புகைப்படங்கள் வெளிப்படுத்தியுள்ளன.

வாகன நகர்வு, இருப்பிட மாற்றத்துக்கும் மேலாக இந்திய, சீனப் படைவீரர்களிடையே இம்மாதம் 15ஆம் திகதி மோதல் நடைபெற்றிருக்கக்கூடிய சிதைவுகள் உள்ள இடங்களை செய்மதிப் புகைப்படங்கள் வெளிப்படுத்தியதுடன், கல்வான் நதியின் பாய்ச்சலை குலைக்க முயலும் சீனாவின் நகர்வும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .