Editorial / 2020 ஜனவரி 28 , பி.ப. 04:10 - 0 - {{hitsCtrl.values.hits}}

கொரனாவைரஸால் 106 பேர் உயிரிழந்துள்ளதுடன், அதன் மையமான மத்திய சீன நகரான வுஹானிலிருந்து தமது பிரஜைகளை வெளியேற்ற ஏனைய அரசாங்கங்கள் முயலுகையில், கொரனாவைரஸைக் கட்டுப்படுத்துவதற்கான எதிர்பாராத நடவடிக்கைகளை சீனா விரிவாக்கியுள்ள நிலையில், வெளிநாடுகளுக்கு பயணஞ் செய்வதை பிற்போடுமாறு இன்று வலியுறுத்தியுள்ளது.
வுஹானிலுள்ள காட்டுவிலங்குச் சந்தையொன்றிலிருந்து கடந்த மாதம் பரவியதாக நிபுணர்களால் நம்பப்படும் குறித்த கொரனாவைரஸானது சீனா முழுவதும், டசின் கணக்கான ஏனைய நாடுகளிலும் எதிர்பாராத போக்குவரத்து கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் பரவியுள்ளது.
அதிகம் போக்குவரத்து நிகழும் சந்திரப் புத்தாண்டு விடுமுறை வந்த நிலையில், கொரனாவைரஸைக் கட்டுப்படுத்தும் முகமாக ஆரம்பத்தில் வுஹானையும், மத்திய ஹுபூ மாகாணத்திலுள்ள ஏனைய நகரங்களையும் கடந்த வாரம் அதிகாரிகள் மூடியுள்ள நிலையில் 50 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் அங்கு சிக்கியுள்ளனர்.
இதைத் தொடர்ந்து சர்வதேச, உள்ளூர் குழுச் சுற்றுப்பயணங்களை சீனா இடைநிறுத்தியிருந்ததுடன், நீண்ட தூர பஸ்கள் உள்ளடங்கலாக சீனாவுக்குள்ளுல் பரவலாக போக்குவரத்து கட்டுப்பாடுகளை விதித்திருந்தது.
இந்நிலையில், புதிதாக 26 இறப்புகள் ஏற்பட்டுள்ளதாக சீனாவின் தேசிய சுகாதார ஆணைக்குழு இன்று அறிவித்துள்ள நிலையில், கொரனாவைரஸால் சீனாவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 106ஆக அதிகரித்துள்ளது. புதிய இறப்புகளில் பெரும்பாலோனோர் வயது வந்தவர்கள் ஆவர். சீனத் தலைநகர் பெய்ஜிங், ஷங்காயிலும் இறப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதேவேளை, உறுதிப்படுத்தப்பட்ட தொற்றல்களுக்கு உள்ளானோர் 4,515 என தேசிய சுகாதார ஆணைக்குழு இன்று தெரிவித்துள்ள நிலையில், இது நேற்றைய எண்ணிக்கையின் ஏறத்தாழ இரண்டு மடங்கு எண்ணிக்கையாகும்.
கைத்தொழிற்பேட்டையான 11 மில்லியன் பேரைக் கொண்டுள்ள வுஹானில் பல ஆயிரக்கணக்கான வெளிநாட்டவர்கள் சிக்கியுள்ள நிலையில், அங்குள்ள 650 ஜப்பானியர்களில் 200 பேரை வாடகைக்கு அமர்த்தப்பட்ட விமானம் மூலம் இன்று மாலை வெளியேற்றுவதாக ஜப்பான் அறிவித்திருந்தது.
இதேவேளை, ஐக்கிய அமெரிக்க இராஜங்கப் பணியாளர்கள், சில ஐக்கிய அமெரிக்கப் பிரஜைகளை ஏற்றிய விமானமொன்று ஐக்கிய அமெரிக்க வாடகை விமானமொன்று வுஹானிலிருந்து கலிபோர்னியாவை நோக்கி நாளை புறப்படவுள்ளது.
3 hours ago
7 hours ago
31 Dec 2025
31 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
7 hours ago
31 Dec 2025
31 Dec 2025