2020 பெப்ரவரி 24, திங்கட்கிழமை

‘வார இறுதியில் பிரெக்சிற் முடிவு’

Editorial   / 2019 ஒக்டோபர் 07 , பி.ப. 07:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா விலகும் (பிரெக்சிற்) ஒப்பந்தம் ஒன்று சாத்தியமானதா என்று இந்த வார இறுதியில் ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானிக்கும் என்று பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன், பிரித்தானியப் பிரதமர் பொரிஸ் ஜோன்சனுக்கு கூறியுள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் கொள்கைகளை ஒப்பந்தமொன்று மதிக்க முடியுமா எனப் பார்ப்பதை நோக்கி பேச்சுக்கள் தற்போது விரைவாக முன்னேறுவதாக ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இம்மாதம் 31ஆம் திகதியைத் தாண்டி ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவதில் தாமதமொன்றுக்கு இருக்கும் என சிந்திப்பதில் ஐரோப்பிய ஒன்றியம் உள்ளீர்க்கப்படக்கூடாது என பிரதமர் பொரிஸ் ஜோன்சன் கூறியுள்ளார்.

எவ்வாறெனினும், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவதற்கான ஒப்பந்தமொன்று இம்மாதம் 19ஆம் திகதிக்குள் இணங்கப்படாவிட்டால், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவதற்கு தாமதமொன்றை பிரதமர் பொரிஸ் ஜோன்சனைக் கோர வைக்கும் சட்டமொன்று காணப்படுகின்றது.

ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்களுடனான கடந்த வாரையிறுதி பேச்சுக்களின் அங்கமாக, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவதற்கான ஒப்பந்தமொன்றை அடையலாம் எனத் தான் நம்புவதாக ஜனாதிபதி இமானுவேல் மக்ரோனிடம் தெரிவித்துள்ள பிரதமர் பொரிஸ் ஜோன்சன், ஆனால் பிரித்தானியாவால் மேற்கொள்ளப்பட்ட சமரசங்களை ஐரோப்பிய ஒன்றியம் கட்டாயம் பிரதிபலிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையிலேயே, ஐரோப்பிய ஒன்றியத்தின் கொள்கைகளை மதிக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறும் ஒப்பந்தமொன்று சாத்தியமானதான என இவ்வாரயிறுதியில் மதிப்பிடும் பொருட்டு ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவதற்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதான பேரம்பேசுநர் மைக்கல் பார்னியரின் அணியுடனான பேரம்பேசல்கள் விரைவாகத் தொடர வேண்டும் என பிரதமர் பொரிஸ் ஜோன்சனிடம் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் கூறியதாக பிரான்ஸ் அரசாங்க அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .