2020 நவம்பர் 25, புதன்கிழமை

சொலமன் தீவில் பூமியதிர்வு; 4 பேர் பலி

Suganthini Ratnam   / 2013 பெப்ரவரி 06 , மு.ப. 08:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

பசுபிக் கடலில் சொலமன் தீவில் ஏற்பட்ட பூமியதிர்ச்சி காரணமாக குறைந்தபட்சம் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன், வீடுகளும் சேதமடைந்துள்ளதாக அந்நாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.

சொலமன் தீவில் பாரிய பூமியதிர்ச்சி ஏற்பட்டதைத் தொடர்ந்து அங்கு சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.

இப்பூமியதிர்ச்சி 8.0 ரிச்டர் அளவில் பதிவாகியுள்ளது. இதனால்  அவுஸ்திரேலியா, நியூஸிலாந்து, இந்தோனேஷியா மற்றும் பிஜி தீவு பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .