2021 மார்ச் 03, புதன்கிழமை

ஹெலிகொப்டர் விபத்தில் துருக்கியில் 17 படையினர் பலி

A.P.Mathan   / 2012 நவம்பர் 10 , பி.ப. 05:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென்கிழக்கு துருக்கியில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற ஹெலிகொப்டர் விபத்தில் 17 படைவீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

சீரற்ற காலநிலை காரணமாக சிர்ட் மாநிலத்திலேயே இந்த கொடிய விபத்து நிகழ்ந்துள்ளது.

துருக்கியின் தென்கிழக்கு பகுதியில் குர்டிஷ் போராளிகளுக்கும் துருக்கி இராணுவத்திற்கும் இடையில் மோதல் இடம்பெற்றுவருகிறது. இந்நடவடிக்கையில் ஈடுபடுத்துவதற்காக இராணுவ வீரர்களை காவிச்சென்ற ஹெலிகொப்டரே சீரற்ற காலநிலையினால் விபத்துக்குள்ளாகியுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

ஹெலிகொப்டரில் பயணித்த 13 படை வீரர்களும் 4 ஹெலிகொப்டர் அதிகாரிகளுமே இவ்விபத்தில் பலியாகியுள்ளதாக சிர்ட் மாநிலத்தின் ஆளுநர் அஹ்மட் அயிடின் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

இவ்விபத்துத் தொடர்பில் சந்தேகம் நிலவுவதால் மேலதிகள விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளதாகவும் ஆளுநர் மேலும் தெரிவித்துள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .