2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

சிரியாவில் தற்கொலைத் தாக்குதல்; 31 பேர் பலி

Suganthini Ratnam   / 2013 ஒக்டோபர் 20 , மு.ப. 11:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிரியாவில் இடம்பெற்றுள்ள தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் குறைந்தபட்சம் 31 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

மத்திய சிரியாவில் உள்ள ஹமா நகரில் டிரக் வண்டி ஒன்றின் மூலம் இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்த நாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.

அரசாங்க சோதனைச் சாவடி ஒன்றை இலக்கு வைத்து வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட குறித்த டிரக் வண்டியின் மூலம் சிரிய கிளர்ச்சிக்காரர்கள் வெடிக்க வைத்துள்ளதாக  அந்த நாட்டு அரச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

பெற்றோல் தாங்கிக்கு அருகில் இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ள நிலையில், பாதிப்புக்கள் மேலும் அதிகரிக்கலாம் எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்தத் தாக்குதலை அல் கைதாவுடன் தொடர்புடையதாகக் கருதப்படும் அல் நுஸ்ரா முன்னணி மேற்கொண்டிருக்கலாம் எனவும் பிரிட்டனை அடித்தளமாகக் கொண்ட மனித உரிமைகளுக்கான சிரிய கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .