Editorial / 2020 மார்ச் 11 , மு.ப. 10:40 - 0 - {{hitsCtrl.values.hits}}

ரஷ்ய ஜனாதிபதியாக 2036ஆம் ஆண்டு வரையில் தான் பதயிலிருப்பதை அனுமதிக்கும் அரசமைப்பு மாற்றங்களுக்கான கதவை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் நேற்று திறந்துள்ளார்.
எனினும், அரசியல் ரீதியாக ரஷ்யா முதிர்ச்சியடைந்த பின்னர் ஜனாதிபதி பதவிக்கால எல்லைகளைத் தான் விரும்புவதாக ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் குறிப்பிட்டுள்ளார்.
தனது இரண்டாவது தொடர்ச்சியானதும், நான்காவதுமான பதவிக் காலம் முடிவடையும்போது அரசமைப்பின்படி எதிர்வரும் 2024ஆம் ஆண்டு ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் பதவி விலக வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
எவ்வாறெனினும், தனது பதவிக்காலத்தை உத்தியோகபூர்வமாக பூச்சியமாக்கும் முன்மொழியப்பட்ட அரசமைப்பின் மாற்றத்துக்கு நாடாளுமன்றத்தின் கீழ்ச்சபையில் உரையாற்றும்போது தனது ஆதரவை ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் வழங்கியிருந்தார்.
ஐக்கிய அமெரிக்காவில் நிலவிய கிளர்ச்சி காரணமாக நான்கு தடவைகள் ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி பிராங்ளின் டி. ரூஸ்வெல்ட் பதவி வகித்தமையானது ஏன் பதவிக்காலங்கள் சில நேரங்களில் தேவைக்கு அதிகமாகக் காணப்படுவதற்கான உதாரணம் என ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் குறிப்பிட்டிருந்தார்.
அந்தவகையில், குறித்த மாற்றங்களுக்கு அரசமைப்பு நீதிமன்றம் ஆதரவளிப்பதுடன், அடுத்த மாதம் ரஷ்ய ரீதியில் நடைபெறவுள்ள வாக்கெடுப்பில் ஆதரவைப் பெறுமாயின் ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் இன்னும் இரண்டு அடுத்தடுத்த ஆறாண்டுகள் பதவிக்காலத்தை வகிக்க முடியும்.
ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் இவ்வாறு செய்து, அவரது உடல்நிலையும், தேர்தல் முடிவுகளும் அனுமதிக்குமிடத்து 2036ஆம் ஆண்டு வரையில் தனது 83ஆவது வயது வரைக்கும் ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் பதவியிலிருக்க முடியும்.
ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் பதவிக்காலத்தை பூச்சியமாக்கும் அரசமைப்பு மாற்றத்தை ஆளும் ஒன்றிணைந்த ரஷ்யக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான வலென்டினா தெரஸ்கோவா முன்மொழிவதாகத் தெரிவித்தமையைத் தொடர்ந்தே நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் பிரசன்னமாகியிருந்தார்.
3 minute ago
2 hours ago
6 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
2 hours ago
6 hours ago
8 hours ago