2020 ஓகஸ்ட் 14, வெள்ளிக்கிழமை

’38 பேருடன் விமானம் மாயம்’

Editorial   / 2019 டிசெம்பர் 10 , மு.ப. 09:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

அன்டார்டிக்காவிலுள்ள தளமொன்றுக்கு 38 பேருடன் பயணித்த தமது சரக்கு விமானங்களிலொன்று காணாமல் போயுள்ளதாக சிலி வான்படை நேற்று தெரிவித்துள்ளது.

தென் சிலி நகரமான புன்டா அரினாஸிலிருந்து இலங்கை நேரப்படி இன்று அதிகாலை 1.25 மணிக்கு புறப்பட்ட ஹெர்குலஸ் சி130 ரக விமானமானது இன்று அதிகாலை 2.30 மணிக்கு சற்றுப் பின்னர் இயக்குநர்களுடன் தொடர்பை இழந்துள்ளது.

இந்நிலையில், சி130 ஹெர்குலஸில் 38 பேர் இருப்பதாகவும், 17 பேர் விமானப் பணியாளர்கள் மற்றும் 21 பேர் பயணிகள் என அறிக்கையொன்றில் வான் படை தெரிவித்துள்ளது.

விமானத்துடனான தொடர்பு இழந்ததைத் தொடர்ந்து அவசரகால எச்சரிக்கையொன்று பிரகடனப்படுத்தப்பட்டதுடன், தேடுதல் மற்றும் மீட்பு அணி செயற்படுத்தப்பட்டிருந்தது.

அன்டார்ட்டிக்கா தளத்திலுள்ள சிலி வசதிகளுக்கான பராமரிப்பு பணிகளுக்கு உதவுவதற்காகவே குறித்த விமானம் சென்றிருந்தது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--