Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Shanmugan Murugavel / 2016 ஜூலை 11 , மு.ப. 02:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
இடம்பெற்றுவரும் யாழ்ப்பாண பிறீமியர் லீக்கின் ஞாயிற்றுக்கிழமை (10) இடம்பெற்ற போட்டிகளில், மானிப்பாய் பரிஷ், சென்றல், யூனியன்ஸ் ஆகிய அணிகள் வெற்றி பெற்றுள்ளன.
பரிஷ், ஜொனியன்ஸ் ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியில், நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற பரிஷ், ஜொனியன்ஸை முதலில் துடுப்பெடுத்தாடப் பணித்திருந்த நிலையில், முதலில் துடுப்பெடுத்தாடிய அவ்வணி, ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 153 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் அவ்வணி சார்பாக, அன்புஜன், ஜதீஸன் ஆகியோர் தலா 36 ஓட்டங்களையும் ஹரிபிரவீன் 33 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் பரிஷ் சார்பாக, வினோத் 4, யாழினியான் 3, கிஷோக்குமார், சுபாஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டினை கைப்பற்றினர்.
பதிலுக்கு 154 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்குடன் துடுப்பெடுத்தாடிய பரிஷ், 18.3 ஓவர்களில் நான்கு விக்கெட்டுகளை மாத்திரமே இழந்து வெற்றியிலக்கை அடைந்தது. துடுப்பாட்டத்தில், அவ்வணி சார்பாக, கோபிரசாத் 39, வினோத் ஆட்டமிழக்காமல் 38, நிதர்சன் 33 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் ஜொனியன்ஸ் சார்பாக, லவேந்திரா, பிருந்தாபன், அகிலன் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டினை கைப்பற்றினர். போட்டியின் நாயகனாக பரிஷின் வினோத் தெரிவானார்.
சென்றல், பற்றீசியன்ஸ் ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியில், நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற சென்றல், முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்து, 20 ஓவர்கள் முடிவில் ஐந்து விக்கெட்டுகளை இழந்து 169 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில், அவ்வணி சார்பாக, சுதர்சன் 57, ரஜீவ்குமார் 20, சுவாதீஸ் 18 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், பற்றீசியன்ஸ் சார்பாக, மிலாந்தோ, நோபேர்ட், கிளின்டன் ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
பதிலுக்கு 170 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்குடன் ஆடிய பற்றீசியன்ஸ், 19 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 146 ஓட்டங்களை மாத்திரமே பெற்று, 23 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. துடுப்பாட்டத்தில் அவ்வணி சார்பாக சதா 25, டொரிஸன் 24, லிவிங்டன் 23, கவஸ்கர் 22 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் சென்றல் சார்பாக, சுவாதீஸ், சலிஸ்ரன் ஆகியோர் தலா நான்கு விக்கெட்டுகளையும் திருக்குமரன் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர். போட்டியின் நாயகனாக சுவாதீஸ் தெரிவானார்.
இதேவேளை, யூனியன்ஸ், கிறாஸ்கொப்பர்ஸ் ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியானது, இரண்டு அணிகளும் தாமதமாக வந்தமையால், 18 ஓவர்கள் கொண்ட போட்டியாக இடம்பெற்றிருந்தது. இதில், நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்று, முதலில் துடுப்பெடுத்தாடிய யூனியன்ஸ், 18 ஓவர்கள் முடிவில் நான்கு விக்கெட்டுகளை இழந்து 185 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் அவ்வணி சார்பாக, ஆகீஸன் 69, ஜான்சன் 50, டக்சயன் 34 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் கிறாஸ்கொப்பர்ஸ் சார்பாக கோகுலன் 2, ஜனன்ராஜ் 1 விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
பதிலுக்கு 186 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கோடு துடுப்பெடுத்தாடிய கிறாஸ்கொப்பர்ஸ், 18 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 79 ஓட்டங்களை மாத்திரமே பெற்று 106 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. துடுப்பாட்டத்தில் அவ்வணி சார்பாக, கோகுலதாஸ் 24, ரசீகரன் 16 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், யூனியன்ஸ் சார்பாக தர்ஷன், தயாளன் ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளையும் ரகுபதி இரண்டு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
8 minute ago
45 minute ago
47 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
45 minute ago
47 minute ago