Shanmugan Murugavel / 2016 ஜூலை 11 , மு.ப. 04:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
-குணசேகரன் சுரேன்
வடமாகாண மட்டப் பாடசாலைகளுக்கிடையில் நடைபெற்று வரும் கால்பந்தாட்டச் சுற்றுப்போட்டியில், 19 வயதுப்பிரிவில் மன்னார் பள்ளிமுனை சென். லூசியா மகா வித்தியாலயம் சம்பியனாகியது.
சென். பற்றிக்ஸ் கல்லூரி மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (10) நடைபெற்ற இறுதிப்போட்டியில் சென். பற்றிக்ஸ் கல்லூரி அணியும், மன்னார் பள்ளிமுனை சென். லூசியா மகா வித்தியாலய அணியும் மோதின.
போட்டி நேரத்தில் இரு அணிகளும் எவ்வித கோல்களையும் அடிக்கவில்லை. இந்நிலையில் வெற்றியாளரைத் தீர்மானிக்க சமநிலை தவிர்ப்பு உதை நாடப்பட்டது. இதில் சென். லூசியா அணி 4-3 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.
மூன்றாமிடத்துக்கான போட்டியில், இளவாலை சென். ஹென்றிஸ் கல்லூரி அணி 4-0 என்ற கோல் கணக்கில் செட்டிக்குளம் மகா வித்தியாலய அணியை வென்றது.
43 minute ago
55 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
55 minute ago
2 hours ago
2 hours ago