2021 மார்ச் 05, வெள்ளிக்கிழமை

15 வயதுக்குட்பட்டவர்களுக்கான கால்பந்தாட்ட இறுதிப் போட்டி நாளை

Suganthini Ratnam   / 2010 ஒக்டோபர் 17 , பி.ப. 02:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எஸ்.குமார்)

இலங்கை பாடசாலைகள் கால்பந்தாட்ட சங்கம் நடத்தும் 15 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான தேசிய மட்ட போட்டிகள் திருகோணமலையில் நடைபெற்று வருகின்றன.  விளையாட்டு மைதானத்தில் இப்போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றது.

21 பாடசாலைகள் அணிகள் பங்குபற்றிய இறுதிச் சுற்றில் அரையிறுதிப் போட்டிகள் நாளை திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளன. இறுதிப் போட்டி மதியம் 2.30 மணிக்கு ஆரம்பமாகும். கிழக்கு மாகாண சுகாதார விளையாட்டுத்துறை அமைச்சர் எம்.எஸ்.சுபைர் பிரதம அதிதியாகக் கலந்து கொள்கின்றார்.

முதலாவது அரையிறுதிப் போட்டியில் திருகோணமலை முள்ளிப்பொத்தாணை இல்ஹிஜ்ரா மகா வித்தியாலயத்தை எதிர்த்து  கோட்டே ஹேவாவிதாரண மகா வித்தியhலய அணி மோதுகின்றது.

மற்றைய போட்டியில்  காலி றிச்மண்ட் கல்லூரியை எதிர்த்து  சிலாபம் ஆனந்தா தேசிய பாடசாலை அணி மோதுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .