2021 ஏப்ரல் 15, வியாழக்கிழமை

1500 மீற்றர் ஓட்டப் போட்டியில் புதிய சாதனை

Suganthini Ratnam   / 2011 ஜூன் 22 , மு.ப. 05:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கிரிசன்)

மருதங்கேணி உதவி அரசாங்க அதிபர் பிரிவைச் சேர்ந்த என். ரஜீகரன் 1500 மீற்றர் ஓட்டப் போட்டியில் கடந்த 32 வருட சாதனையை முறியடித்து புதிய சாதனை படைத்துள்ளார்.

வடமாகாண விளையாட்டுத் திணைக்களத்தின் அனுசரணையுடன் யாழ்.  மாவட்ட செயலக விளையாட்டுப் பிரிவு, யாழ்.  மாவட்ட பிரதேச செயலகங்கள் மற்றும் உதவி இரசாங்க அதிபர் பிரிவுகளுக்கு இடையே  நடத்திய தடகளப் போட்டிகளில் இந்த சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.

1975ஆம் ஆண்டு சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தைச் சேர்ந்த இ.திருநாவுக்கரசு 4:20:2 செக்கனில் ஓடி ஏற்படுத்திய சாதனையை, இந்த வருடம் மருதங்கேணி உதவி அரசாங்க அதிபர் பிரிவைச் சேர்ந்த என்.ரஜீகரன் 4:20;1 செக்கனில் ஓடி புதிய சாதனை படைத்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X