2021 ஜனவரி 24, ஞாயிற்றுக்கிழமை

சென். ஜோன்ஸ் கல்லூரி அணி 153 ஓட்டங்களால் வெற்றி

Suganthini Ratnam   / 2012 டிசெம்பர் 26 , மு.ப. 07:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கு.சுரேன்)

இலங்கை கிரிக்கெட் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ். மாவட்டப் பாடசாலைகளின் 13 வயதுப்பிரிவு அணிகளுக்கிடையில் மட்டுப்படுத்தப்படாத பந்துப்பரிமாற்றம் கொண்ட முதல் சுற்றுப்போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ளது.

இந்நிலையில் இரண்டாம் சுற்றுப்போட்டிகள் ஆரம்பிப்பதற்கு முன்னர், அணிகளுக்கிடையில் 50 பந்துபரிமாற்றங்கள் மட்டுப்படுத்தப்பட்ட துடுப்பாட்டப் போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

சென்.ஜோன்ஸ் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற இதற்கான போட்டியில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணியினை எதிர்த்து சென்.ஜோன்ஸ் கல்லூரி அணி மோதியது. முதலில் துடுப்பெடுத்தாடிய சென்.ஜோன்ஸ் கல்லூரி அணி 50 ஓவர்கள் நிறைவில் 9 இலக்குகளை இழந்து 222 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில். ஜங்கரன் 42, சொரூபன் 24 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.

பந்துவீச்சில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி சார்பாக அன்டர்ஸன் 4 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார்.

223 ஓட்டங்களை பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் பதிலுக்குத் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணி 17 ஓவர்களில் 69 ஓட்டங்களுக்குச் சகல இலக்குகளையும் இழந்து. 153 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

பந்துவீச்சில் சென்.ஜோன்ஸ் கல்லூரி அணி சார்பாக கபில்ராஜ் 4 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார்.

  Comments - 0

  • Dilip Sunday, 06 January 2013 11:03 PM

    நன்ரி சுரேன்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .