2020 ஒக்டோபர் 29, வியாழக்கிழமை

புத்தளத்தில் வீதிக் கால்பந்தாட்டம்

Suganthini Ratnam   / 2010 ஓகஸ்ட் 20 , பி.ப. 12:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

(அப்துல்லாஹ்)
 
புத்தளம் மாவட்டத்திலுள்ள  இளைஞர்களை கால்பந்தாட்டத் துறையில் ஊக்குவிக்கும் நோக்கில் வீதி கால்பந்தாட்டப்  ( ஸ்ட்ரீட் புட்போல் ) போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
 
30 மீற்றர் அகலமும் 30 மீற்றர் நீளமும் கொண்டதாக   கால்பந்தாட்ட   மைதானம் அமைக்கப்படும்.  அணிக்கு 4 வீரர்கள் இடம்பெறுவர். போட்டிகள்   20 நிமிடத்திற்கு  நொக் அவுட் முறையில் நடைபெறும் போட்டிகளில் 15 வயதுக்கு கீழ்ப்பட்டவர்கள்  கலந்து கொள்ள முடியும்.
 
இப்போட்டிகளில் பங்குபற்ற விரும்புபவர்கள் இலங்கை கால்பந்தாட்ட சம்மேளன இளைஞர்  அபிவிருத்தி புத்தளம் மாவட்ட இணைப்பாளர் எம். எப்.எம்.ஹு மாயுன்  ஸாஹிரா தேசிய பாடசாலை, புத்தளம் என்ற முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்பி வைக்குமாறு கேட்கப்பட்டுள்ளனர்
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--