Menaka Mookandi / 2010 செப்டெம்பர் 01 , மு.ப. 04:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எல்.அப்துல் அஸீஸ்)
பாண்டிருப்பு "யூத்" விளையாட்டுக் கழகத்தின் 36ஆவது ஆண்டு நிறைவை ஒட்டி இடம்பெற்ற 10 க்கு 10 மென்பந்து கிரிக்கட் சுற்றுப் போட்டியில் “ராவல்பின்டி எக்ஸ்பிரஸ்” விளையாட்டுக்கழகம் 21 ஓட்டங்களினால் வெற்றியீட்டியது.
சாந்த குமார் ஞாபகார்த்த வெற்றிக் கிண்ணத்திற்காக நடத்தப்பட்ட இந்த சுற்றுப்போட்டியில் இப்பிராந்தியத்தில் உள்ள 32 விளையாட்டுக்கழகங்கள் பங்குபற்றிய போதும், இறுதிப் போட்டிக்கு கல்முனை “நியூ ஸ்டார்” விளையாட்டுக்கழகமும் கல்முனை “ராவல் பின்டி எக்ஸ்பிரஸ” விளையாட்டுக்கழகமும் தெரிவு தெரிவுசெய்யப்பட்டன.
முதலில் துடுப்பெடுத்தாடிய ராவல் பின்டி எக்ஸ்பிரஸ் விளையாட்டுக்கழகம் 7 விக்கட்டுக்களை இழந்து 10 ஓவர் முடிவில் 84 ஓட்டங்களை பெற்றது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியூ ஸ்டார் விளையாட்டுக்கழகம் 10 ஓவர் முடிவில் 4 விக்கட்டுக்களை இழந்து 63 ஓட்டங்களை பெற்றது.
இப்போட்டிக்கு பிரதம அதிதியாக உதவி திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.உதயகுமார், கௌரவ அதிதியாக தொழில்நுட்ப உத்தியோகத்தர் எஸ்.சிறீரங்கன் ஆகியோர் கலந்து கொண்டனர். பிரதம அதிதி எஸ்.உதயகுமார் வெற்றிககிண்ணத்தை வெற்றிபெற்ற அணிக்கு வழங்கிவைப்பதனை படத்தில் காணலாம்.

5 hours ago
9 hours ago
31 Jan 2026
31 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
9 hours ago
31 Jan 2026
31 Jan 2026