2020 செப்டெம்பர் 25, வெள்ளிக்கிழமை

மூவின மக்களின் புரிந்துணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இடம்பெற்ற மரதன் ஓட்டம்

A.P.Mathan   / 2010 செப்டெம்பர் 27 , மு.ப. 08:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.ஐ.எம்.அஸ்ஹர் )
அம்பாறை மாவட்டத்திலுள்ள மூவின மக்களிடையேயும் பரஸ்பர புரிந்துணர்வையும் சகோதரத்துவத்தையும் ஏற்படுத்தும் நோக்கில்' நெஸ்லே லங்கா' நிறுவனம் ஒழுங்கு செய்திருந்த நெஸ்டமோல்ட் மரதன் ஓட்டப்போட்டி கடந்த சனிக்கிழமை அக்கரைப்பற்றில் இருந்து ஒலுவில் வரை இடம்பெற்றது.

மூவினங்களையும் சேர்ந்த சுமார் 1500 வீர, வீராங்கனைகள் கலந்து கொண்ட மேற்படி மரதன் ஓட்டப்போட்டியில் ஆண்கள் பிரிவில் விமானப்படை வீரர் ஆர்.பி.ஏ.குமாரசிங்க முதலாம் இடத்தையும் பெண்கள் பிரிவில் பதியத்தலாவையைச் சேர்ந்த ஜே.ஏ.எம்.ஜீ.ஜயசுந்தர முதலாம் இடத்தையும் பெற்றுக்கொண்டனர்.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண பிரதி பொலிஸ்மா அதிபர் ஆர்.எம்.வீரசூரிய கலந்து கொண்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--