2021 மார்ச் 09, செவ்வாய்க்கிழமை

நீதிமன்ற உத்தியோஸ்தர்களுக்கு இடையிலான விளையாட்டு விழா

Menaka Mookandi   / 2010 ஒக்டோபர் 03 , மு.ப. 06:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(றிபாயா நூர்)

மட்டக்களப்பு மேல் நீதி வலய நலன்புரி அமைப்பு மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் நேற்று நடத்திய நீதிமன்றங்களின் உத்தியோஸ்தர்களுக்கிடையிலான விளையாட்டு விழாவில் 49 புள்ளிகளைப்பெற்று மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் முதலாமிடத்தினைப் பெற்றது.

இரண்டாமிடத்தினை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றமும். வாழைச்சசேனை மாவட்ட நீதிமன்றம் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்றம் ஆகிய நீதிமன்றங்கள் தலா 15 புள்ளிகளைப்பெற்று மூன்றாமிடத்தையும் பெற்றக்கொண்டன.

நீதிமன்றங்களுக்கிடையில் நடைபெற்ற இவ்விளையாட்டுப்போட்டியில கால்ப்பந்தாட்டம், கிரிக்கட் மற்றும் எல்லே போன்ற குழு விளையாட்டுக்களும் மைதான நிகழ்ச்சிகளும் கையிறுழுத்தல், சங்கீதக்கதிரை போன்ற விளையாட்டு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி திருமதி கே.சிவபாதசுந்தரம் தலைமையில் நடைபெற்ற இவ்விளையாட்டு விழாவில் உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.ஐ.இமாம். பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்.

அம்பாறை மேல் நீதிமன்ற  நீதிபதி பி.சொர்ணராஜா மற்றும் கல்மனை மேல் நீதிமன்ற நீதிபதி திருமதி வி.சந்திரமணி, மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்ற நீதிபதி டி.எல்.ஏ.மனாப், மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி வி.ராமகமலன், வாழைச்சேனை மாவட்ட நீதிமன்ற நீதிபதி ஏ.எம்.எம்.றியாழ் உட்பட நீதிமன்ற பதிவாளர்கள் உத்தியோகஸ்தர்கள் இவ்விளையாட்டு விழாவில் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .