2021 பெப்ரவரி 25, வியாழக்கிழமை

தேசிய ரீதியில் பதக்கங்களை வென்றவர்களுக்கு ஆளுநர் விருதுகள்

Super User   / 2010 ஒக்டோபர் 12 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேசிய மட்டப் பாடசாலைகளுக்கு இடையே நடைபெற்ற பெருவிளையாட்டுகள் மற்றும் மெய்வன்மைப் போட்டிகளில் பதக்கங்களைப் பெற்றுக்கொண்ட வடமாகாண பாடசாலைகளைச் சேர்ந்த வீரர்களுக்கு ஆளுநர் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்நிகழ்வு நேற்று யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள வடக்கு மாகாண அலுவலகத்தில் ஆளுநர் ஜி.ஏ. சந்திரசிறி தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளர் இளங்கோவன், வடக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் ப. விக்கினேஸ்வரன், வடக்கு மாகாண உடற்கல்விப் பணிப்பாளர் எஸ். சத்தியபாலன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

பதக்கங்களை வென்றவர்களுக்கு பணப்பரிசில்களும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .