2020 நவம்பர் 27, வெள்ளிக்கிழமை

மருதமுனை சம்ஸ் மத்திய கல்லூரி மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு

Menaka Mookandi   / 2010 ஒக்டோபர் 20 , மு.ப. 11:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹனீக் அஹமட்)

இனங்களிடையே சமாதானத்தை வலுப்படுத்தும் நோக்கில் அம்பாறை மாவட்ட கால்ப்பந்தாட்ட சம்மேளனமும், மேர்சிகொப் நிறுவனமும் இணைந்து அம்பாறை மாவட்டப் பாடசாலைகளிடையே நடத்திய கால்ப்பந்தாட்டச் சுற்றுப்போட்டியில் வெற்றிபெற்ற மருதமுனை சம்ஸ் மத்திய கல்லூரி மாணவர்களைப் பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வு நேற்று கல்லூரி வளாகத்தில் இடம்பெற்றது.

சம்ஸ் மத்திய கல்லூரியின் அதிபர் எஸ்.எல்.எம்.ஜலாலுத்தீன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், கல்முனை வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் பி. சிவப்பிரகாசம் அதிதியாகக் கலந்து கொண்டு, வெற்றிபெற்ற வீரர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

மேற்படி கால்ப்பந்தாட்டச் சுற்றுப் போட்டியில், இறுதியாக மருதமுனையை சம்ஸ் மத்திய கல்லூரியை எதிர்த்து மருதமுனை அல்மனார் மத்திய கல்லூரி களமிறங்கியது.

இதில் நான்குக்கு மூன்று எனும் கோல் வித்தியாசத்தில் சம்ஸ் மத்திய கல்லூரி வெற்றி பெற்றது. மேற்படி போட்டி, அண்மையில் இறக்காமம் அல் அஷ்ரப் மகா வித்தியாலய மைதானத்தில் இடம்பெற்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--