2020 நவம்பர் 28, சனிக்கிழமை

புதுக்குடியிருப்பில் சிரேஷ்ட பிரஜைகளுக்கான விளையாட்டுப் போட்டி

A.P.Mathan   / 2010 ஒக்டோபர் 22 , பி.ப. 07:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.லோஹித்)

மட்டக்களப்பு மண்முனைப் பற்று பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் புதுக்குடியிருப்பில் நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் சிரேஷ்ட பிரஜைகளுக்கான விளையாட்டுப் போட்டி நடைபெற்றது.

புதுக்குடியிருப்பு கண்ணகி அம்மன் ஆலய முன்றலில் நடைபெற்ற இவ் விளையாட்டுப் போட்டியில், மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் தனபாலசுந்தரம் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.

இதில் சிரேஷ்ட பிரஜைகளுக்கான கயிறு இழுத்தல், தேங்காய் துருவுதல், கிடுகு பின்னுதல், 100 மீற்றர் ஓட்டப்போட்டி உள்ளிட்ட விளையாட்டுகள் நடத்தப்பட்டன. இறுதியில் இப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசில்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--