Menaka Mookandi / 2010 நவம்பர் 01 , மு.ப. 05:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எல்.ஏ.அஸீஸ்)
மர்ஹூம் எஸ்.எம்.ஏ.மத்தீன் ஞாபகார்த்த கிண்ணத்துக்கான பீ.பிரிவு கால்ப்பந்தாட்ட சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டியில் சவலக்கடை அமீர் அலி விளையாட்டுக்கழகம் வெற்றியீட்டியது.
அம்பாறை மாவட்ட கால்ப்பந்தாட்ட சங்கத்தினால் மர்ஹூம் எஸ்.எம்.ஏ. மத்தீன் ஞாபாகார்த்த கிண்ணத்துக்காக நடத்தப்பட்ட பி.பிரிவு கால்ப்பந்தாட்ட சுற்றுப் போட்டியின் இறுதி போட்டி கல்முனை நகர ஐக்கிய மைதானத்தில் இடம்பெற்றது.
இப்போட்டியில் கல்முனை பிர்லியன் பி.விளையாட்டுக்கழக அணியினரை எதிர்த்து சவலக்கடை அமீர் அலி விளையாட்டுக்கழக அணியினர் மோதிய போதும் அமீர் அலி விளையாட்டுக்கழக அணியினர் 3க்கு 4 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றியீட்டினர்.
அம்பாறை மாவட்ட கால்ப்பந்தாட்ட சங்கத்தின் தலைவர் சட்டத்தரணி ஏ.எம். றகீப் தலைமையில் இடம்பெற்ற இந்த இறுதிப் போட்டிக்கு பிரதம அதிதியாக 'எப்.டெச்' பொறியியல் சேவை நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் எம்.எஸ்.எம். பஸீல் கலந்து கொண்டார்.
அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த பத்து உதைப்பந்தாட்ட விளையாட்டுக்கழக அணியினர் இந்த போட்டியில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .