Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 02, புதன்கிழமை
Menaka Mookandi / 2010 நவம்பர் 08 , மு.ப. 06:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எஸ்.குமார்)
இலங்கை இராணுவத்தின் 22ஆவது படைப்பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்டஇ பாடசாலைக்களுக்கு இடையிலான வலைபந்தாட்ட சுற்றுப் போட்டியில் பதவி ஸ்ரீபுர பளுஹக வங்குக வித்தியாலயம் வெற்றியீட்டியது. ஏகாம்பரம் விளையாட்டு மைதானத்தில் கடந்த சனிக்கிழமை இந்தப் போட்டிகள் நடத்தப்பட்ட நிலையில் அதில் 23 பாடசாலைகள் பங்குபற்றின.
இறுதிப் போட்டியில் கந்தளாய் அக்கிரபோதி தேசிய பாடசாலையை 17:05 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி கொண்டு படைபிரிவு கேடயத்தை தனதாக்கியது. திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் மேஜர் ஜெனரல் ரஞ்சித் சில்வா பிரதம அதிதியாக கலந்து கொண்டு இதனை வழங்கிவைத்தார்.
இச்சுற்றுப் போட்டியில் சிறந்த பேற்று எய்துனராக ஆர்.மேனகா பிரசஞ்சனியும் சிறந்த தடுப்பாளராக கே.டி.உரேசா மதுமாலியும்(அக்கிர போதி) வலைபந்து ராணியாக என்.ஜி.சாரிக்கா மதுமாலி தெரிவுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
2 hours ago