2020 நவம்பர் 25, புதன்கிழமை

தெல்லிப்பளை ஐ.வி.கழகம், வல்வெட்டித்துறை நவஜீவன் இறுதிப்போட்டிக்குத் தெரிவு

Super User   / 2010 நவம்பர் 08 , மு.ப. 11:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(நவம்)

காங்கேசன்துறை பொலிஸ் அத்தியட்சகர் பிரிவுக்கு உட்பட்ட கழக அணிகளுக்கு இடையேயான  கரப்பந்தாட்டத் தொடரின் இறுதிப்போட்டிக்கு நவஜீவன் விளையாட்டுக் கழகமும் தெல்லிப்பளை ஐக்கிய விளையாட்டுக் கழகமும் இறுதிப்போட்டிக்குத் தெரிவாகியுள்ளன.

நேற்றுமுன்தினம் சனிக்கிழமை மல்லாகம் மகாவித்தியாலய மைதானத்தில்  நடைபெற்ற   அரையிறுதிப் போட்டியொன்றில்  நெல்லியடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட  நெல்லியடி ஐக்கிய விளையாட்டுக்கழகமும் வல்வெட்டித்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வல்வெட்டித்துறை நவஜீவன் விளையாட்டுக் கழகமும்  மோதின.

மூன்று சுற்றுகள் கொண்ட இந்தப் போட்டியில் நவஜீவன் விளையாட்டுக்கழகம் முதல் இரண்டு நேர் சுற்றுக்களை 25:12, 25:11 புள்ளிகள் விகிதத்தில் வெற்றி பெற்றது.

மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் தெல்லிப்பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தெல்லிப்பளை ஐக்கிய விளையாட்டுக் கழகமும் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அச்சுவேலி ஸ்ரார் விளையாட்டுக் கழகமும் மோதிக்கொண்டன.

இதில் முதலாம் மூன்றாம் சுற்றுக்களை தெல்லிப்பளை ஜக்கிய விளையாட்டுக்கழகம் 25 : 17 25 : 15 என்ற விகிதத்தில் வென்றது.  இரண்டாம் சுற்றை கோப்பாய் ஸ்ரார் விளையாட்டுக்கழகம் 32:30 புள்ளிகள் என்ற விகிதத்தில் வென்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--